என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » டெம்போவில் மணல் கடத்தல்
நீங்கள் தேடியது "டெம்போவில் மணல் கடத்தல்"
திருவட்டார் அருகே டெம்போவில் திருட்டுத்தனமாக மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த டெம்போவை பறிமுதல் செய்தனர்.
திருவட்டார்:
திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரனுக்கு மணல் கடத்தல் தொடர்பாக ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. திருவட்டார் அருகே மூவாற்று முகம் ஆற்றில் இருந்து மணல் கடத்தப்படுவதாகவும் போலீசார் உடனே அங்கு சென்றால் மணல் கடத்தல் காரர்களை பிடித்துவிடலாம் என்றும் தகவல் கொடுத்தவர் கூறினார்.
இதைதொடர்ந்து திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் தலைமையிலான போலீசார் மூவாற்று முகத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு ஆற்றில் ஒரு டெம்போ நின்று கொண்டிருந்தது. அதில் மணலும் கடத்துவதற்காக ஏற்றிக் கொண்டிருந்தனர். உடனே போலீசார் அதை தடுத்து நிறுத்தினர்.
மேலும் மணல் கடத்தலில் ஈடுபட்ட திருவட்டாரை சேர்ந்த ஜாண்ரோஸ் என்பவரை கைது செய்தனர். அவரது டெம்போவும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
×

X